villupuram: தேசிய வில்வித்தை, சிலம்பம் போட்டி பதக்கங்கள் வென்ற மாணவர்கள்

42

villupuram: விழுப்புரம் விராட்டிக்குப்பம்பாதை ஸ்ரீமா மழலையர் பள்ளி மாணவர்கள், 15வது தேசிய அளவிலான லக்னோவில் டிச. 27ல் நடைபெற்ற வில்வித்தை போட்டி மற்றும் புதுச்சேரியில் நடந்த 5வது தேசிய பாரம்பரிய சிலம்ப போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வென்றனர்.

இப்பள்ளி மாணவர்கள், 7 முதல் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவு வில்வித்தை விளையாட்டில் சாரகேஷ், 7; தவ்பிகா, 10; ராஷித்ரோஷன், 10; தஷ்வ்ந்த், 10; ஆகியோர் தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் பங்கேற்று 6 தங்கம், 1 வெள்ளி பதக்கங்களை வென்றனர்.

இதே போல், புதுச்சேரியில் டிச. 26ல் நடந்த 5வது தேசிய சிலம்பம் போட்டியில், கமலேஷ்காந்த், 7; முஹம்மதுஆதில், 7; ஆகியோர் பங்கேற்று 2 வெள்ளி பதக்கங்களை வென்று பெருமை சேர்த்தனர். இந்த மாணவர்களை பள்ளி முதல்வர் பாக்யா, ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் பாராட்டினர்.

You might also like