Villupuram: விழுப்புரத்தில் அமைச்சர் தலைமையில் வனத்துறை ஆய்வுக்கூட்டம்

96

Villupuram: தமிழக அளவிலான வன அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம், விழுப்புரத்தில் நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார். முதன்மைச் செயலாளர் செந்தில்குமார், கலெக்டர் பழனி, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ராகேஷ் குமார் டோக்ரா, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் தீபக் ஸ்ரீவத்சவா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தமிழக வனத்துறையின் வளர்ச்சி திட்டங்கள், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. பயிற்சி அளிக்கப்பட்ட கும்கி யானைகள் மூலம் காட்டு யானைகளை விரட்டும் பணி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது

You might also like