Vallam: கரும்பு விவசாயிகளுக்கு வல்லத்தில் பயிற்சி முகாம்

31

Vallam: வல்லம் வேளாண்மை விரிவாக்கமையத்தில் அட்மா திட்டத்தின் கீழ் நீடித்த நவீன கரும்பு சாகுபடி என்ற தலைப்பில் கரும்பு விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது. ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார். துணை சேர்மன் மலர்வழி அண்ணாதுரை முன்னிலை வகித்தார். வேளாண்மை இணை இயக்குனர் ஈஸ்வர் கரும்பு சாகுபடி தொழில்நுட்பம் மற்றும் அரசு திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். வேளாண் உபகரணங்கள் வழங்கினார்.

துணை இயக்குனர் திட்டம் சீனிவாசன் மண்வளம், பரு கரணை கரும்பு சாகுபடி குறித்தும், உதவி இயக்குனர் சரவணன் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் திட்டம், இடுபொருட்கள் இருப்பு குறித்தும் பேசினார். ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை உதவி மேலாளர் தேவராஜ், விரிவாக்க அலுவலர் சந்தோஷ், கரும்பு அலுவலர்கள் சந்தானம் மற்றும் செல்வம் ஆகியோர் நீடித்த நவீன கரும்பு சாகுபடி தொழில் நுட்பம், கரும்பில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து பயிற்சியளித்தனர்.

துணை வேளாண்மை அலுவலர் கோவிந்தராஜ், வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுபாஷ், உதவி தொழில்நுட்ப மேலாளர் பாலாஜி மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள், முன்னோடி கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகளுக்கு மானிய விலையில் மின்கல தெளிப்பான் வழங்கினர்.

You might also like