Gingee: செஞ்சியில் அதிமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

31

Gingee: விழுப்புரம் மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் செஞ்சியில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட மாணவரணி செயலர் என். ஜி. சக்திவேல் தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் கு. கண்ணன் தொடக்க உரையாற்றினார். ஒன்றியச் செயலர்கள் ஆர். புண்ணியமூர்த்தி (மேல்மலையனூர் (வடக்கு)), ஏ. கோவிந்தசாமி (செஞ்சி மேற்கு), வி. பி. பாலகிருஷ்ணன் (மேல்மலையனூர் தெற்கு) உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், செஞ்சி ராமச்சந்திரன், வானூர் எம்எல்ஏ எம். சக்கரபாணி, திண்டிவனம் எம்எல்ஏ பி. அர்ஜூனன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். அதைத்தொடர்ந்து, மாவட்டச் செயலர் சி. வி. சண்முகம் எம். பி. பேசியது: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் தமிழகத்தின் உரிமை விட்டுக் கொடுக்கப்படுகிறது. தற்போது, தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. இந்த விவகாரத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் மவுனம் காத்து வருகிறார். நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியில் எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் நிவாரணம் முழுமையாக வழங்கப்படவில்லை. விவசாயிகளுக்கு நிவாரணம் இல்லை என்றார்.

You might also like