Vikravandi: விக்கிரவாண்டி பேரூராட்சி மன்ற கூட்டம்; நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்கள்

142

Vikravandi: விக்கிரவாண்டியில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் கலாம் தலைமை தாங்கினார். துணை தலைவர் பாலாஜி, செயல் அலுவலர் ஷேக் லத்தீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் ராஜேஷ் வரவேற்று தீர்மானங்களை வாசித்தார்.

கூட்டத்தில் விக்கிரவாண்டி கக்கன் நகரில் பல்நோக்கு சமுதாய கூடம் கட்ட ரூ. 1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்த முதல்-அமைச்சர் மு. ஸ்டாலினுக்கும், விக்கிரவாண்டியில் இருந்து மேல்மலையனூர் மற்றும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ் இயக்க உத்தரவிட்ட போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவ சங்கருக்கும் நன்றி தெரிவிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நியமனக்குழு உறுப்பினர் சர்க்கார் பாபு மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

You might also like