Tindivanam: திண்டிவனம்: மயானக்கொள்ளை ஊர்வலத்தில் கட்சி கொடிகளுக்கு தடை

Tindivanam: திண்டிவனம், செஞ்சி சாலையில் உள்ள அங்காளம்மன் கோவிலில், நாளை 27ம் தேதி மயானக் கொள்ளை திருவிழா நடக்கிறது. இதையொட்டி சட்டம் – ஒழுங்கு தொடர்பான முன்னெச்சரிக்கை கூட்டம் திண்டிவனம் சப் கலெக்டர் அலுவலகத்தில் சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம் தலை மையில் நேற்று நடந்தது. தாசில்தார் சிவா, டி. எஸ். பி. , பிரகாஷ், இன்ஸ் பெக்டர் விஜயகுமார், அறங்காவலர் குழுவினர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மயானக்கொள்ளை ஊர்வலத்தின் போது பூ மாலைகளை மின்கம்பிகள் மீது வீசக்கூடாது, இரும்பு லோகத்தால் செய்யப்பட்ட சூலம், கத்தி, வேல் உள்ளிட்டவை களை எடுத்து வரக்கூடாது. அரசியல் கட்சிகளின் கொடிகளை எடுத்து வரக்கூடாது. ஊர்வலத்தில் வருபவர்கள் மது அருந்திவிட்டு சாமியாடக் கூடாது. மயானக் கொள்ளை ஊர்வலம் மாலை 5: 30 மணிக்குள் காந்தி சிலை அருகே முடித்துக்கொள்ள வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.