Skating: விழுப்புரம் ஸ்கேட்டிங் மாணவர்களுக்கு முன்னாள் எம். பி., வாழ்த்து

Skating: விழுப்புரம் ஸ்டூடென்ட்ஸ் ஸ்பீட் ஸ்கேட்டிங் அசோசியேஷன் மாணவர்கள் பல்வேறு ஸ்கேட்டிங் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்று இந்த மாவட்டத்திற்கு பெருமையை சேர்த்துள்ளனர். இந்த மாணவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை, கடலூர், திருவண்ணாமலை, புதுச்சேரியில் நடந்த ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்று பல்வேறு பிரிவுகளில் பரிசுகள், கேடயங்கள் வென்று சாதித்துள்ளனர். இந்த மாணவர்கள், நேற்று முன்னாள் எம்.பி., கவுதமசிகாமணியை நேரில் சந்தித்து தாங்கள் வாங்கிய பரிசுகள், சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, முன்னாள் எம்.பி., போட்டியில் சாதித்த மாணவர்களை பாராட்டினார். அசோசியேஷன் தலைவர் சிங்காரவேல், துணைத்தலைவர் சந்தோஷ்குமார், பொதுச் செயலாளர் ஜோதி நரசிம்மன், பொருளாளர் சொக்கலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை பயிற்சியாளர் காமேஸ்வரன் செய்திருந்தார்.