Tindivanam: திண்டிவனம் ஈஸ்வரன் கோயில் சாலையை சீரமைக்க கோரி பா. ஜ. , மனு

Tindivanam: திண்டிவனம் ஈஸ்வரன் கோவில் சாலையை சீரமைக்கக் கோரி பா.ஜ., சார்பில் நகராட்சி கமிஷனர் குமரனிடம் மனு அளிக்கப்பட்டது. நகர பா.ஜ., தலைவர் வெங்கடேச பெருமாள் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனு: திண்டிவனத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்ட ஈஸ்வரன் கோவில் சாலையை சீரமைத்து புதிய சாலை அமைக்க வேண்டும். நல்லியகோடன் நகரில் சேதமடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும். முருங்கப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் அடைப்புகளை சீரமைக்க வேண்டும். நகரம் முழுவதும் கொசு மருந்து தெளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.