Tindivanam Auto Accident : இளம் பெண் பலி

Tindivanam Auto Accident : திண்டிவனம் கிடங்கல்(2) பகுதியை சேர்ந்தவர் மூங்கிலான், 30; ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ரேவதி, 27; இவர்களது ஒரு வயது மகள் தன்விகா.
மூங்கிலான் கடந்த 24 ம் தேதி மாலை, ஆவணிப்பூரிலுள்ள தனது மாமியார் வீட்டிற்கு திண்டிவனத்திலிருந்து ஆட்டோவில் மனைவி மகளுடன் சென்றனர்.
ஆட்டோ சாரம் அருகே சென்ற போது, பின்னால் வந்த காரின் மீது மற்றொரு கார் மோதியது. இதில் ஆட்டோ மீது பின்னால் வந்த கார் மோதியது. இதில் ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் காயமடைந்த மூங்கிலான், ரேவதி மற்றும் குழந்தை ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
நேற்று அதிகாலை ரேவதி சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Subscribe to Nam Tindivanam Youtube Channel