Gold Rate: வாரத்துவக்கத்தில் தங்கம் விலை குறைவு; சவரனுக்கு ரூ.520 சரிவு

194

Gold Rate: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்துள்ளது.

அமெரிக்கா – சீனா இடையில் நிலவும் வர்த்தக போர் உள்ளிட்ட காரணங்களால், சர்வதேச முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் அதிக முதலீடு செய்கின்றனர்.

இதனால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளதால், நம் நாட்டில் அதன் விலை புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சவரனுக்கு ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், வாரத்துவக்கத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை ரூ.520 குறைந்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இன்று (ஏப்ரல் 28) ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ஒரு சவரன் ரூ.71,520க்கு விற்பனை செய்யப் படுகிறது. கிராமுக்கு ரூ.65 சரிந்து ஒரு கிராம் ரூ.8,940க்கு விற்பனை ஆகிறது.

அதேபோல, வெள்ளியின் விலையில் மாற்றமில்லாமல், கிராமுக்கு ரூ.111க்கும், ஒரு கிலோ 1,11,000க்கும் விற்பனையாகி வருகிறது.

You might also like