Koothandavar Kovil Thiruvizha: ஆண்கள் தாலி கட்டிக் கொள்ளும் வினோத நிகழ்வு!! இப்படியும் ஒரு வேண்டுதலா.?

Koothandavar Kovil Thiruvizha: உலகப்புகழ் பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் கண் திறத்தல் நிகழ்ச்சியில் ஏராளமான திருநங்கைகள் மணக்கோலத்தில், தாலிகட்டி கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருநங்கைகள் போல வேண்டுதல்கள் வைக்கும் பொது மக்களாகிய ஆண்கள், பெண்கள், சிறு குழந்தைகள் என அனைவருமே கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் தாலி கட்டிக் கொள்கிறார்கள்.
குறிப்பாக ஆண்கள் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் எனவும், நோய் நொடி நீங்க வேண்டும் எனவும், தான் பெற்ற பிள்ளைகளுக்கு திருமணம் ஆகவேண்டும் எனவும் வேண்டுதல்கள் வைத்து ஆண்களும் கூத்தாண்டவர் கோவிலில் தாலி கட்டி கொள்கிறார்கள்.