Marakkanam : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Marakkanam : மரக்காணம் ஊராட்சிக்குட்பட்ட தீர்த்தவாரி, கீழ்புத்துப்பட்டு, புதுக்குப்பம் மற்றும் தந்திராயன்குப்பம் கடற்கரை பகுதிகளில் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்திடும் வகையிலும், கடற்கரையை மேம்படுத்தி குடிநீர், கழிவறை வசதி மற்றும் சிறுவர் பூங்கா உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசித்தார்.
மேலும், கீழ்புத்துப்பட்டு கடற்கரை பகுதியில், நீலக்கொடி கடற்கரை சான்று பெறுவதற்காக மேம்படுத்திடும் வகையில் அடிப்படை கட்டமைப்புகள் ஏற்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் கீழ், புளூகிரீன் சென்டர் அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, நடுக்குப்பம் பகுதியில் இடம் தேர்வு தொடர்பாக ஆய்வு செய்தார்.