Auroville : வி. புதுப்பாக்கத்தில் இலவச மருத்துவ முகாம்

34

Auroville : ஆரோவில் கிராம செயல்வழிக்குழு மற்றும் பிம்ஸ் மருத்துவமனை கூட்டு முயற்சி

 

வி. புதுப்பாக்கம் கிராமத்தில் ஆரோவில் கிராம செயல்வழிக்குழு மற்றும் பிம்ஸ் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த முகாமை ஆரோவில் கிராம செயல்வழிக்குழுவின் திட்ட இயக்குநர் ஜெரால்டு மோரீஸ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். வி. புதுப்பாக்கம் ஊராட்சித் தலைவர் வேலு முன்னிலை வகித்தார்.

இந்த முகாமில், பொது நல மருத்துவம், எலும்பு, கண், காது, தொண்டை, குழந்தைகள் நலம், மற்றும் அறுவை சிகிச்சை தொடர்பான பலதரப்பட்ட மருத்துவ பரிசோதனைகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

ஏராளமான பொதுமக்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு மருத்துவ சேவைகளைப் பெற்று பயன்பெற்றனர்.

இதுபோன்ற சமூக நல முன்னெடுப்புகள், கிராமப்புற மக்களுக்கு அத்தியாவசியமான மருத்துவ சேவைகளை எளிதில் கிடைக்கச் செய்து, அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன.

You might also like