Villupuram : தேவனூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பள்ளிக் கட்டிடம் திறப்பு: மஸ்தான் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்

27

Villupuram : விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஒன்றியம், தேவனூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவப் பள்ளிக் கட்டிடம் மாணவர்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது.

மொத்தம் 235.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டிடத்தை, விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மஸ்தான் எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தார்.

இந்த விழாவில், திமுக ஒன்றியக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கவுன்சிலர், ஒன்றியக் கவுன்சிலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், பிற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் எனப் பலரும் உடனிருந்தனர்.

புதிய கட்டிடத் திறப்பு விழா மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கட்டிடம் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like