Vikkiravandi : பெருமாள் கோவிலில் 48 வயது நபர் திடீர் உயிர் இழப்பு

21

Vikkiravandi : அடுத்த வி. சாத்தனூரைச் சேர்ந்த ராஜாங்கம் (48), கூலித் தொழிலாளியான இவர், மனைவியைப் பிரிந்து, தனது தாய் பிச்சையம்மாளுடன் தனியாக வசித்து வந்தார்.

நேற்று பகல் 11:45 மணியளவில், விக்கிரவாண்டி பெருமாள் கோவிலில் நடைபெற்ற யாகசாலை பூஜையில் கலந்துகொண்டார்.

பூஜை முடிந்து பிரசாதம் வாங்கிய ராஜாங்கம், உடனடியாக அங்கேயே மயங்கி விழுந்தார். இதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளிக்க முயன்றபோது, அவர் உயிரிழந்தது உறுதியானது.

தகவலறிந்து வந்த விக்கிரவாண்டி காவல்துறையினர், ராஜாங்கத்தின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ராஜாங்கத்தின் திடீர் மரணம் குறித்து விக்கிரவாண்டி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like