Villupuram : நாய்க்கடி பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு

14

Villupuram :  மாவட்டம், மகாராஜபுரம் ஹவுசிங் போர்டு குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரிந்த வெறிநாய் ஒன்று, நேற்று அப்பகுதியில் நடந்து சென்ற 17 பேரை கடித்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, விழுப்புரம் நகராட்சி நிர்வாகம் உடனடியாக களமிறங்கியுள்ளது. வெறிநாயைப் பிடிப்பதற்காக இரண்டு சிறப்புக் குழுக்களை அமைத்து, தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து அறிந்ததும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், நேற்று காலை மகாராஜபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் எதிர்கால சுகாதார முன்னெற்பாடுகள் குறித்து மருத்துவக் குழுவினருடன் கேட்டறிந்தார்.

இந்தச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், விழுப்புரம் நகரின் அனைத்து 42 வார்டுகளிலும் சுற்றித் திரியும் தெருநாய்களைப் பிடித்து, கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

நகராட்சி நிர்வாகம் இந்த கோரிக்கையை ஏற்று, அனைத்துப் பகுதிகளிலும் தெருநாய் ஒழிப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like