Villupuram : கணவர் மாயம்; மனைவி காவல் நிலையத்தில் புகார்

21

Villupuram : மாவட்டம், விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட கிழக்கு பாண்டி சாலையைச் சேர்ந்தவர் துரைராஜ் (43), தந்தை துரைசாமி. இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த மே 21ஆம் தேதி, வழக்கம்போல் பணிக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து புறப்பட்ட துரைராஜ், அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

அவரது மனைவி இந்துமதி, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகள் என பல இடங்களிலும் தேடியும் துரைராஜ் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. காணாமல் போன துரைராஜுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

கணவனைக் காணாமல் மனமுடைந்த இந்துமதி, இதுகுறித்து விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த விழுப்புரம் நகர போலீசார், துரைராஜை தீவிரமாக தேடி வருகின்றனர்.

அவர் மாயமானதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like