Tindivanam : தென்பசியார் சுயம்பு நாக அங்காளம்மன் கோவில் தீமிதி திருவிழா கோலாகலம்

22

Tindivanam :  அடுத்த தென்பசியார் கிராமத்தில் அமைந்துள்ள சுயம்பு நாக அங்காளம்மன் ஆலயத்தின் வருடாந்திர தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது

கடந்த மே 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழா, அப்பகுதி மக்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்றன. அன்று மதியம் 1:00 மணியளவில், சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

அதைத் தொடர்ந்து, இரவு 7:00 மணியளவில், திருவிழாவின் முக்கிய அம்சமான தீமிதி விழா கோலாகலமாக அரங்கேறியது. அக்னி குண்டம் வளர்க்கப்பட்டு, பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் அலகு குத்தி, தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடன்களைச் செலுத்தினர்.

இந்த தீமிதி விழாவைக் காண சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் அறக்கட்டளையின் தலைவரான கவுன்சிலர் ராம்குமார் சிறப்பாக செய்திருந்தார்.

You might also like