Mailam : நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் துவக்கி வைப்பு

Mailam : விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மயிலம் நர்சிங் கல்லூரியில் “நலன் காக்கும் ஸ்டாலின்” என்ற பெயரில் மாபெரும் மருத்துவ முகாம் ஒன்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான், இந்த முகாமிற்கு தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் எனப் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு முகாமை சிறப்பித்தனர்.
இந்த மருத்துவ முகாமில், பொதுமக்களின் உடல்நலம் குறித்த பிரச்சனைகளைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தேவையான உயர்தர சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
ரத்தப் பரிசோதனை, இதய நோய் கண்டறிதல், நீரிழிவு, கண் மற்றும் பல் மருத்துவ பரிசோதனைகள் எனப் பல்வேறு சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்தக் குறிப்பிட்ட உயர்தர மருத்துவ வசதிகளை, பொதுமக்கள் இலவசமாகப் பெற்று, இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டனர்.
முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ, முகாமுக்கு வந்த பொதுமக்களிடம் நேரடியாக கலந்துரையாடி, அவர்களின் கருத்துக்களையும் தேவைகளையும் கேட்டறிந்தார். இந்த முகாமானது, கிராமப்புற மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.