Mailam : தமிழ் கலை அறிவியல் கல்லுாரியில் ரத்ததான முகாம் நடந்தது

Mailam : மயிலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், திண்டிவனம் ரத்த வங்கி, ஆதீன திருமடம், ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் கலை அறிவியல் கல்லுாரி நாட்டு நல பணி திட்டம் சார்பில் நடந்த முகாமிற்கு கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.
மயிலம் வட்டார மருத்துவ அலுவலர் தேன்மொழி முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் சிவசுப்ரமணியன் வரவேற்றார். கல்லுாரி செயலாளர் ராஜ்குமார் ராஜேந்திரன் ரத்ததானம் செய்வது அவசியம் குறித்து பேசினார். 30 மாணவ, மாணவிகள், 5 தன்னார்வலர்கள் ரத்ததானம் செய்தனர். முகாமில் மருத்துவர்கள் தனலட்சுமி கிரிஜா, மயிலம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரமணி, சுகாதார ஆய்வாளர்கள் பாலகுமாரன், மோகனகிருஷ்ணன் பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.