ADMK: அ. தி. மு. க., பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

46

ADMK: விழுப்புரம் மாவட்டம், வானூர் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், கரசானூர் கிராமத்தில் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. வானூர் ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ., சக்ரபாணி, பூத் கமிட்டி பொறுப்பாளர் முருகன் ஆகியோர் பூத் கமிட்டி அமைத்து, பொறுப்பாளர்களிடம் புத்தகங்களை வழங்கி ஆலோசனைகள் கூறினர். இதில் வானூர் ஒன்றிய துணை செயலாளர் கணேசன், விவசாய அணி செயலாளர் கார்த்திகேயன், வர்த்தக அணி செயலாளர் காட்கில், மகளிர் அணி செயலாளர் மாலா, மாவட்ட மாணவர் அணி துணை தலைவர் ஜெயபீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You might also like