AIADMK : மயிலத்தில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்

123

AIADMK : மயிலம் தொகுதி அ. தி. மு. க. சார்பில் வல்லம் அடுத்த செல்லபிராட்டியில் அண்ணாதுரை பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று(செப்.23) நடந்தது. வல்லம் வடக்கு ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் நடராஜன், மயிலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சேகரன் வரவேற்றனர்.

மயிலம் மேற்கு ஒன்றிய செயலாளர் விஜயன், ஒலக்கூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி துவக்க உரையாற்றினர். முன்னாள் அமைச்சர் சண்முகம், வழக்கறிஞர் பிரிவு மாநில துணைச்செயலாளர் சசிரேகா, தலைமை கழக பேச்சாளர் அன்பு முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட இணைச் செயலாளர் ஆனந்தி அண்ணாதுரை, முன்னாள் துணைச் சேர்மன் பரிமளா பன்னீர் செல்வம், பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், இளைஞரணி மாவட்ட செயலாளர் பிரித்விராஜ், ஒன்றிய செயலாளர் சேட்டு மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

You might also like