Government college : திண்டிவனம் அரசு கல்லூரியில் சிறப்பு கலந்தாய்வு நடைபெற்றது

182

Government college : திண்டிவனத்திலுள்ள அரசு கல்லுாரியில், முதற்கட்டமாக சிறப்பு பிரிவிற்கான கலந்தாய்வு துவங்கியது. இதில் விளையாட்டு, என். சி. சி. , மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் உள்ளிட்ட பிரிவிற்கான கலந்தாய்வு நடந்தது. கல்லுாரியில் முதல்வர் ரவீந்திரன் தலைமையில், 3 பேர் கொண்ட மாணவர் சேர்க்கை குழு முன்னிலையில் கலந்தாய்வு நடந்தது. இதில் சிறப்பு பிரிவை சேர்ந்த 15க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்றும்(30ம் தேதி) சிறப்பு பிரிவிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அடுத்த கட்ட கலந்தாய்வு ஜூன் 10 ம் தேதி, பி. எஸ். சி. , (கணிதம், வேதியில், தாவரவியல் உள்ளிட்ட பட்டப்படிப்பு) சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

You might also like