Melmalaiyanur : அங்காளம்மன் கோயிலில் ஆடி பவுர்ணமி திருவிளக்கு பூஜை கோலாகலம்!

342

Melmalaiyanur : விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆடி மாத பவுர்ணமியையொட்டி நேற்று முன்தினம் மாலை திருவிளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.

அதிகாலையில் அம்மன் மற்றும் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அம்மனுக்கு வெள்ளி கவச அலங்காரமும் செய்யப்பட்டது.

மாலை 6 மணிக்கு வரலட்சுமி அலங்காரத்தில் இருந்த உற்சவர் முன்னிலையில், ஏராளமான பெண்கள் குத்து விளக்கேற்றி திருவிளக்கு பூஜை செய்தனர்.

இரவு 8:30 மணிக்கு மகா தீபாராதனை மற்றும் அர்ச்சனை நடைபெற்றது. பெண்களுக்கு மங்கள பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.

இந்த விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் சேட்டு என்கிற ஏழுமலை மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

You might also like