Abdul kalam : அப்துல்கலாம் நினைவு தினம் திண்டிவனத்தில் அமைதி பேரணி

129

Abdul kalam : திண்டிவனத்தில் அப்துல்கலாமின் 9ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, பள்ளி மாணவர்கள் பங்கேற்ற அமைதி பேரணி நடந்தது. பெலாக்குப்பம் ராஜராஜேஸ்வரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டிவனம் நண்பர்கள் லயன்ஸ் குடும்பம் இணைந்து நடத்திய அமைதி பேரணி திண்டிவனம் தீர்த்தக்குளத்தில் இருந்து துவங்கி காந்தி சிலை அருகே முடிவடைந்தது.

அங்கு, அப்துல்கலாம் படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ராஜராஜேஸ்வரி பள்ளி நிர்வாகி பாலசுப்ரமணி, பள்ளியின் சீனியர் முதல்வர் கலைவாணி, முதல்வர் நாராயணன், நண்பர்கள் லயன்ஸ் சங்கத்தின் மாவட்ட தலைவர்கள் பால்பாண்டியன்ரமேஷ், ஆசிரியர் வெங்கடேசன், சைமன்துரைசிங், நகர தலைவர் சக்திவேல், செயலாளர் சரவணன், செந்தில்குமார், மணிகண்டன் அப்துல் கலாம் கல்பனா லியோ சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

You might also like