Accident Free Diwali Awareness Event : விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிழ்ச்சி.

220

Accident Free Diwali Awareness Event : விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிழ்ச்சி.

 

திண்டிவனம் தீயணைப்பு நிலையத்தின் சார்பில், மயிலம் அடுத்த ரெட்டணை கென்னடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் கிரீன் பாரடைஸ் சி. பி. எஸ். இ. , பள்ளிகளில் வித்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி முதல்வர் சண்முகம் தலைமை தாங்கினார்.

தீயணைப்பு நிலைய அலுவலர் லட்சுமணன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் சந்தோஷ் வரவேற்றார். தீயணைப்பு வீரர்களை, பள்ளி இயக்குநர் கார்த்திகேயன் சண்முகம் கவுரவித்தார்.

தீயணைப்பு சிறப்பு நிலை அலுவலர் முருகயைன் பங்கேற்று பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது, தீ விபத்து நேரத்தில் கையாளும் முறைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தார். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். நிர்வாக அலுவலர் சுரேந்தர் நன்றி கூறினார்.

You might also like