Villupuram Collector | தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

808

Villupuram Collector Latest Press Release

Villupuram Collector : விழுப்புரம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க 2008-ம் ஆண்டு வெடிபொருள் சட்ட விதிகளின் படி தற்காலிக பட்டாசு உரிமம் கோருபவர்கள் பொது இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

உரிமம் பெற உரிய ஆவணங்களுடன் தங்களது விண்ணப்பங்களை வரும் 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தேவையான ஆவணங்கள் :

பட்டாசு  கடைக்கான தற்காலிக உரிமம் பெற விருப்பமுள்ளவர்கள் படிவம்- ஏ. இ. -5-ல் பூர்த்தி செய்த விண்ணப்பம், தற்காலிக பட்டாசு உரிமம் கோரும் இடத்தின் அசல் வரைபடங்கள், உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளராக இருப்பின் அதற்கான பத்திர நகல்.

உரிமம் கோரும் இடம் வாடகை கட்டிடம் எனில் இடத்தின் கட்டிட உரிமையாளரிடம் ரூ. 20-க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் வாடகை ஒப்பந்தப்பத்திரம், உரிம கட்டணம் ரூ. 600-யை உரிய அரசு கணக்கில் E-செலான் மூலம் செலுத்த வேண்டும்.

மேலும்  அதற்கான அசல் செலுத்துச்சீட்டு, மனுதாரரின் முகவரிக்கான ஆதாரம், நடப்பு நிதியாண்டில் வீட்டுவரி செலுத்திய ரசீது, மனுதாரரின் பாஸ்போர்ட் அளவுள்ள 2 புகைப்படங்கள் ஆகியவற்றுடன்

சேவை கட்டணமாக ரூ. 500 யும் செலுத்தி  இ-சேவை மையத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி தேதி | Villupuram Collector

விண்ணப்பங்களை வரும் 30-ந் தேதி மாலை 5.45 மணிக்குள்  இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

30-ந் தேதிக்குள் தற்காலிக பட்டாசு கடை உரிமம் கோரி பொது இ-சேவை மையங்கள் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு விழுபுரம் மாவட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம் திண்டிவனம் Facebook & Instagram

பக்கங்களை Follow செய்யுங்கள்.

You might also like