Gingee Fort : செஞ்சிக்கோட்டையை பார்வையிட தடை: கலெக்டர் உத்தரவு

134

Gingee Fort : செஞ்சிக்கோட்டையில் ஆய்வு செய்ய உள்ளதால், நாளை (செப்.,27) பொதுமக்கள் பார்வையிட அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விழுப்புரம் கலெக்டர் பழனி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சி பகுதியில் உள்ள செஞ்சிக்கோட்டையினை, யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக தெரிவு செய்வதற்காக, யுனெஸ்கோ குழுவினர் நாளை (27ம் தேதி) செஞ்சிக்கோட்டைக்கு வருகைதந்து, ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். எனவே, நாளை (செப்.,27) ஒரு நாள் மட்டும், பொதுமக்கள் உட்பட யாரும் செஞ்சிக்கோட்டைக்குள் சென்று பார்வையிட அனுமதியில்லை. என்று அதில் கூறப்பட்டுள்ளது.

You might also like