Bitcoin முதலீட்டில் இளம் பெண்ணிடம் ரூ.1.34 லட்சம் அபேஸ் 

773

Bitcoin முதலீட்டில் இளம் பெண்ணிடம் ரூ.1.34 லட்சம் அபேஸ்

Bitcoin ல் முதலீடு செய்வதாக கூறி இளம் பெண்ணிடம் ரூபாய் 1. 34 லட்சம்  பணத்தை ஏமாற்றிய மர்ம நபர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் நேருஜி சாலையைச் சேர்ந்தவர் விஜய் ராமசாமி மகள் அக்ஷய ரூபஸ்ரீ. இவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்திற்கு கடந்த 17ம் தேதி கல்லுாரி சீனியர் ஒருவர்  Bitcoin ல் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

அதிலிருந்த இன்ஸ்ட்ராகிராம் பாக்கத்தின்  IDயை தொடர்பு கொண்டுள்ளார் அக்ஷய ரூபஸ்ரீ, பிட்காயினில் ரூபாய் 10 ஆயிரம் முதலீடு செய்தால், ஒரு லட்சம் வரை லாபம் கொடுப்பதாக மர்ம நபர் கூறியுள்ளார்.

இதனை உண்மை என நம்பி 6 தவணையாக ஒரு லட்சத்து 34 ஆயிரம் ரூபாயை அக்ஷய ரூபஸ்ரீ, அந்த மர்ம நபருக்கு அனுப்பியுள்ளார்.

Mobile Photography Competition in Tindivanam 2022

அதன்பின், அந்த மர்மநபரை மீண்டும் தொடர்பு கொள்ள முடியாததால், தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை அறிந்தார்.

இதனையடுத்து அக்ஷய ரூபஸ்ரீ இது குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் அளித்த புகாரின்பேரில், விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து Bitcoinல் முதலீடு செய்வதாக கூறி ஏமாற்றிய மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like