Vanur : ஓடை, புறம்போக்கு நிலத்தில் சாலை; பொதுமக்கள் முற்றுகை

92

Vanur : கிளியனுார் அருகே கல்குவாரிக்கு செல்ல ஓடை புறம்போக்கு நிலத்தில் சாலை போடுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு நிலவியது. கொந்தமூர் கிராமத்தில் தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரிக்கு செல்ல ஏற்கனவே ஒரு பாதை உள்ளது. இருப்பினும் மின்சாரம் கொண்டு செல்வதற்காக பொதுப்பணித் துறையில் அனுமதி பெற்று, ஓடை வழியாக மாற்றுப் பாதை அமைத்துள்ளார்.

இதற்காக நேற்று முன்தினம் (செப்.,23) முதல் நீர் ஓடையை ஆக்கிரமித்து சாலை போடும் பணி நடந்தது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை 9: 00 மணியளவில் அங்கு திரண்டு ஹிட்டாச் முன் அமர்ந்து முற்றுகையிட்டு சாலை போட எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.

தகவலறிந்த கிளியனுார் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொதுமக்களுக்கும், போலீசாருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும், தாசில்தார் தலைமையில் கூட்டம் நடத்தி, அதில் முடிவடுத்துக் கொள்ளலாம் என போலீசார் தெரிவித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

You might also like