மயிலத்தில் இரத்த தான முகாம் | Tindivanam News

மயிலத்தில் இரத்த தான முகாம்
இன்று காலை திண்டிவனம் அடுத்த மயிலம் அருகே லைட் அப் விழுப்புரம் சார்பில் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனை இரத்த வங்கியுடன் இணைந்து இரத்த தான முகாம் நடைபெற்றது.
இந்த இரத்த தான முகாமானது திண்டிவனம் வட்டம் கொல்லியங்குணம் கிராமம் லைட் அப் விழுப்புரம் பயிற்சி வளாகத்தில் நடைபெற்றது.
காவல் துணை கண்காணிப்பாளர் இரத்த தானம் வழங்கினார்
இரத்த தான முகாமில் உயர்திரு. சே. கனகேசன் (காவல் துணை கண்காணிப்பாளர்) தலைமையேற்று இரத்த தானத்தை வழங்கினார். முகாமை சிறப்பிக்க திருமதி கிருபாலட்சுமி (மைலம் காவல் ஆய்வாளர்), கொல்லியங்குணம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. ஜோதிலட்சுமி M. வரணமுத்து ஆகியோர் வருகை தந்தனர்.
மேலும் உப தலைவர் ராகுல், விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கியின் சாப்பில் மருத்துவர் கெஜபிரியா மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.
இரத்த தான முகாமை லைட் அப் விழுப்புரம் சார்பில் முனைவர். A. ரட்சகராஜர், போதகர்கள்: டேனியல், வெங்கட், கார்த்திக் ஆகியேர் ஏற்பாடு செய்தனர்.
இந்த முகாமில் 23 கொடையாளர்கள் இரத்த தானம் வழங்கினர்.