மைலத்தில் Light-Up Villupuram நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம்

602

மைலத்தில் மாபெரும் இரத்த தான முகாம்

Light-Up Villupuram மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமை துவக்கி வைத்து முதல் இரத்த தானம் அளிப்பவர் உயர்திரு கவிஞர் சே. கணேசன், காவல் துணை கண்காணிப்பாளர்.

சிறப்பு விருந்தினர்களாக திருமதி விஜயலட்சுமி, காவல் ஆய்வாளர் (மயிலம் காவல் நிலையம்) மற்றும் திருமதி ஜோதிலட்சுமி- M. வர்ணமுத்து, ஊராட்சி மன்ற தலைவர் கொள்ளியங்குணம்.

இந்த ரத்ததான முகாமானது Light-Up Villupuram பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளது. Light-Up Villupuram பயிற்சி மையமானது BWDA Finance office campus, மைலம் ரோடு, கொல்லியங்குணத்தில் அமைந்துள்ளது.

இந்த மாபெரும் ரத்ததான முகாமானது வருகின்ற 14-3-2022 திங்கட்கிழமை அன்று நடைபெற இருக்கிறது. காலை 9 மணி முதல் மதியம் 12:30 மணி வரை இந்த ரத்ததான முகாம் நடைபெற உள்ளது.

ரத்ததானம் ஓர் விலையில்லா உயிர்காக்கும் சேவை என்பார்கள் மேலும் தானங்களில் சிறந்தது ரத்ததானம் எனவும் கூறுவார்கள். எனவே தானம் கொடுக்க ஏதும் இல்லை என இருந்தாலும் குருதி கொடையினால் உயிரை காக்கலாம்.

ஆகையால் ரத்த தானம் கொடுக்க விருப்பம் உள்ளவர்கள் இந்த ரத்ததான முகாமில் கலந்துகொண்டு இரத்தம் கொடுத்து பல உயிரை காப்போம்.

 

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா

திண்டிவனத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை அடுத்து மாவட்ட திமுக தொண்டரணி சார்பில் பொதுமக்களுக்கு இலவச பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தொண்டரணி அமைப்பாளர் ராஜசக்தி இந்த விழாவிற்கு தலைமை தாங்கினார் மேலும் சிறப்பு விருந்தினராக சென்று பேரூராட்சியில் தலைவர் மொக்தியார் அலி  பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். 

திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் சேகர், முன்னாள் எம். எல். ஏ. , சேதுநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

மேலும் நகர பொருளாளர் கண்ணன், கவுன்சிலர்கள் வளர்மதி ராஜசக்தி, சின்னசாமி, பாபு, சந்திரன், லதா சாரங்கபாணி, சதீஷ், நிர்வாகிகள் மலர்செல்வம், பிர்லா செல்வம், முனியப்பன் உடனிருந்தனர்.

முருகன், பூபதி, பிரகாஷ்ராஜ், சிவா, அருண், ராஜேஷ், செந்தில்குமார் ஆகியோரும் பங்கேற்றனர். மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் திரு சுந்தர் நன்றி கூறினார்.

 

மரகாணம் ஈசிஆர் ரோட்டில் விபத்து

மரகாணம் ஈசிஆர் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டன தடுப்பு கட்டையில் மோதி உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் மரகாணம் அடுத்த கரிப்பாளையம் பகுதியை சேர்ந்த எட்டியப்பன் என்பவரின் மகன் விக்னேஷ்.இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் பணி நிமித்தமாக அவரும் லாரி கிளீனர் இருசக்கர வாகனத்தில் வெண்ணங்குபட்டு பகுதியிலிருந்து மரக்காணம் நோக்கி வந்துகொண்டிருந்தனர்.

அப்போது தாழங்காடு பகுதியில் பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த தடுப்பு கட்டையில் மோதியுள்ளது.

இதில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் அவருடன் வந்திருந்த கார்த்திகேயன் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு கிடந்துள்ளார்.

அவரை அக்கம்பக்கத்தினர் புதுவை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

You might also like