Offenders Confir Language Eṭuppu News : பிரம்மதேசம் குற்ற பதிவேடு குற்றவாளிகள் உறுதி மொழி எடுப்பு

189

Offenders Confir Language Eṭuppu News : பிரம்மதேசம் குற்ற பதிவேடு குற்றவாளிகள் உறுதி மொழி எடுப்பு.

விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேச காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குற்ற பதிவேடு குற்றவாளிகள் 8 பேரை காவல் நிலையம் வரவழைத்து இன்ஸ்பெக்டர் பிரகாஷ் முன்னிலையில் இனிவரும் காலங்களில் பொது மக்களின் உயிருக்கும் உடமைக்கும் எவ்விதமான ஆபத்தினை ஏற்படுத்த மாட்டேன்,

சட்டத்தை மீறி சட்ட விரோத செயல்களை செய்ய மாட்டேன் என்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க மாட்டேன்,

என்றும் கள்ளச்சாராயம் விற்க மாட்டேன் என்னால் பொதுமக்களுக்கு எவ்வித தீங்கையும் ஏற்படுத்த மாட்டேன்,

கல் குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்களிடம் மிரட்டி பணம் கேட்க மாட்டேன் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட மாட்டேன் என உளமாற உறுதி கூறுகிறேன் என கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்,

இதை மீறினால் குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டம் பாயும் என இன்ஸ்பெக்டர் எச்சரித்து அனுப்பினர், இந்த நிகழ்ச்சியில் உடன் பிரம்மதேசம் போலீஸ் நிலைய சப்இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

You might also like