செஞ்சியில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

திண்டிவனம் அடுத்த செஞ்சியில் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி மற்றும் பணத்தை திருடிச்சென்ற நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
செஞ்சி, விழுப்புரம் ரோடு பாலாஜி நகரை சேர்ந்த சேகர், தனது வீட்டை பூட்டி விட்டு கடந்த 11ஆம் தேதி காலையில் தன்னுடைய மனைவியுடன் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றிருக்கிறார்.
திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது அலமாரியில் வைத்திருந்த கிண்ணம், வெள்ளி டம்ளர், குத்துவிளக்கு உட்பட 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அரை கிலோ வெள்ளி பொருட்கள் மேலும் 4000 ரூபாயையும் திருட்டு போயிருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் சேகர் அவர்கள் செஞ்சி போலீஸில் வழக்குப் பதிந்து திருடர்களையும் பிடித்து தன்னுடைய பொருட்களை மீட்டு தருமாறு கோரிக்கை வைத்துள்ளார்.
வழக்கு பதிந்த செஞ்சி போலீசார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இது போன்ற குற்றச் சம்பவங்கள் நடைபெறாஹ வண்ணம் போலீஸ் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.