By election : இன்றுடன் வேட்புமனு தாக்கல் கடைசி நாள்

By election : விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ந் தேதி தொடங்கியது. முதல் நாளில் 5 வேட்பாளர்களும், 2-ம் நாளில் ஒருவரும், 3-ம் நாளில் ஒருவரும், 4-ம் நாளான நேற்று முன்தினம் 10 பேரும் என மொத்தம் 17 வேட்பாளர்கள் 20 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதுவரை இத்தொகுதியில் 24 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் இன்றுடன் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. கடைசி நாள் என்பதால் சுயேச்சை வேட்பாளர்கள் சிலர் இன்று வேட்புமனு தாக்கல் செய்யக்கூடும் என தெரிகிறது.