Collector : இலவச தையல் இயந்திரம் விண்ணப்பிக்க அழைப்பு

126

Collector : இலவச தையல் இயந்திரம் பெறாத முன்னாள் படைவீரர் குடும்பத்தினர், உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்டத்தில், மத்திய, மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில், தையற் பயிற்சி முடித்து உரிய சான்று பெற்று, இலவச தையல் இயந்திரம் பெறாத முன்னாள் படைவீரரின் மனைவி, படைவீரர் குடும்பம் சார்ந்த கைம்பெண்கள் மற்றும் திருமணமாகாத மகள்கள், உரிய சான்றுகளுடன், தங்களது பெயரினை, விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை அணுகி, வரும் 25ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ளுமாறு, செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

You might also like