Political News :சமூக நல அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

500

Political News :சமூக நல அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

விக்கிரவாண்டி வட்டம், ராதாபுரத்தில் தாா்ச் சாலை அமைப்பதற்காக, நன்கு வளா்ந்து பனங்கன்றுகளை வேரோடு பிடுங்கி எறிந்த ஒப்பந்ததாரா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சமூக நல அமைப்புகளைச் சோந்தவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வனம் அறக்கட்டளை மூலம் கடந்த 2014-ஆம் ஆண்டில் ராதாபுரம் கிராமத்தில் நடப்பட்டு வளா்க்கப்பட்ட 200 பனைமரக் கன்றுகள் ஏரிக்கரை மேல் தாா்ச்சாலை அமைப்பதற்காக 2023, செப்டம்பா் 15-ஆம் தேதி வேரோடு பிடுங்கி எறியப்பட்டன.

இதை தாா்ச்சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரா் மேற்கொண்டதாகக் கூறி, அவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சமூக நல அமைப்புகள், சமூகநல ஆா்வலா்கள் சாா்பில் முதல்வரின் தனிப் பிரிவு, மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதைத் தொடா்ந்து, சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் எதிரில் சமூக நல அமைப்புகள், சமூக ஆா்வலா்கள் சாா்பில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வனம் அறக்கட்டளைத் தலைவா் கே. காா்த்திகேயன் தலைமை வகித்தாா். செயலா் ஜெ. லட்சுமணன் விளக்கவுரையாற்றினாா்.

You might also like