Cancer: மேல்சித்தாமூரில் புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்

Cancer: வல்லம் ஒன்றியம், மேல் சித்தாமூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நாட்டார்மங்கலம் ஊராட்சியில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமமூர்த்தி வரவேற்றார். மருத்துவ அலுவலர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். டாக்டர்கள் முத்துவேல், நிஷாந்த், இளங்கோவன், இந்திரா ஆகியோர் புற்றுநோய் எப்படி ஏற்படுகிறது. பரிசோதனை விவரம், சிகிச்சை குறித்து பேசினர். கல்லுாரி மாணவியரின் விழிப்புணர்வு நாடகம், பேச்சுப் போட்டி நடந்தது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோயின் தன்மை குறித்து விளக்கினர். செவிலியர்கள், காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகையுடன் கலந்து கொண்டனர். ஊர்வலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முடிவடைந்தது. அங்கு சுகாதார செவிலியர்கள், மாணவிகளுக்கு பரிசு வழங்கினர்.