Vikravandi : இறந்த கார் டிரைவர் உடல் மறு பிரேத பரிசோதனை

829

Vikravandi உஸ்மான் நகரை சேர்ந்த அப்துல் சுபான் என்பவரது மகன் Jafar. கார் டிரைவரான ஜாபர் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 6-ந் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து Vikravandi போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரின் உடல் மத சம்பிரதாயத்தின்படி அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஜாபரின் இறப்பில் சந்தேகம் உள்ளது எனவே இறந்த ஜாபரின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யக்கோரி அவரது மனைவி அஷரப் நிஷா  சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு ஜாபரின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய கூறி உத்தரவிட்டது.

இதையடுத்து விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் , சமூக நல தாசில்தார் கணேஷ் ஆகியோர் முன்னிலையில் ஒயிட் மசூதி அருகே கபர்ஸ்தானில் புதைக்கப்பட்டிருந்த இறந்த ஜாபரின் உடலை பேரூராட்சி பணியாளர்கள் தோண்டி எடுத்தனர்.

தொடர்ந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர் கீதாஞ்சலி தலைமையில் டாக்டர் மதுவர்த்தனா, லேப் டெக்னீஷியன் கணேசன் மற்றும் உதவியாளர்கள் ஆகியோரை கொண்ட குழுவினர் ஜாபரின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்தனர்.

பிறகு ஜாபரின் உடலானது அதே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்வின் போது ஜாபரின் உறவினர்கள், மனைவி அஷரப் நிஷா, வருவாய் ஆய்வாளர் சார்லின், கிராம நிர்வாக அலுவலர் ஜெயப்பிரகாஷ், துப்புரவு மேற்பார்வையாளர் ராமலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.

நம் திண்டிவனம் Youtube Channel யை Subscribe செய்யுங்கள்.

You might also like