Mailam வேன் கவிழ்ந்ததில் 5 பேர் காயம்

746

Mailam வேன் கவிழ்ந்ததில் 5 பேர் காயம்

Mailam அருகே சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் கார் மற்றும் தனியார் பஸ்  மோதிக்கொண்டதில் 5 பேர் காயமடைந்தனர்.

திருச்சியில் இருந்து சென்னைக்கு இன்ஜின் உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று திண்டிவனம் அருகே சென்று கொண்டிருந்தது.

திருச்சியைச் சேர்ந்த ராஜி என்ற டிரைவர் வேனை ஓட்டி என்றார். திண்டிவனம் வட்டம் Mailam அடுத்த கேணிப்பட்டு அருகே நேற்று மாலை 4: 30 மணியளவில் வேன் வந்துகொண்டிருந்தது.

சாலையின் தடுப்புச்சுவரில் மோதி வேன் கவிழ்ந்தது. அப்போது, அப்பகுதி வழியாக சென்னை நோக்கிச் சென்ற காரானது கவிழ்ந்த வேன் மீது மோதியது.

அதன் பின்னால் வந்த தனியார் பஸ், கார் மீது மோதி நின்றது. இதில் 5 பேர் சிறிய அளவில்  காயமடைந்தனர்.

சரக்கு வேன் டிரைவர் இந்த விபத்தில் காயமின்றி தப்பினார். காயமடைந்த 5 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்தின் காரணமாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படது.

Villupuram அருகே 2 லாரிகள் மோதல் டிரைவர் படுகாயம்

சென்னை நங்காநல்லூரை சேர்ந்தவர் வரதராஜ். இவர் பார்சல் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார்.

another-truck-collides-with-truck-near-villupuram-driver-injury-traffic-impairment

இவர் நேற்று சென்னையில் இயங்கிவரும் தனியார் நிறுவனத்திலிருந்து இரும்பு பொருட்கள், சில்வர் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்னையில் இருந்து விழுப்புரம் மார்கமாக திருச்சி நோக்கி சென்றுள்ளார்.

அப்பொழுது Villupuram அடுத்த பெரங்கியூர் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை லாரி இழந்தது. அப்போது பின்னால் வேகமாக கோதுமை ஏற்றிக்கொண்டு வந்த லாரி, பார்சல் ஏற்றி வந்த லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் பார்சல் ஏற்றி வந்த லாரி தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி டிரைவர் மற்றும் கிளீனர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

லாரிகள் இரண்டும் விபத்தால் பலத்த சேதமாகி சாலையின் குறுக்கே கிடந்தன. இதனால் போக்குவரத்து அப்பகுதியில் பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த திருவெண்ணை நல்லூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை  மீட்டு சிகிச்சைகாக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்சேர்த்தனர்.

மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக கிடந்த 2 லாரிகளையும் பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர்.

இந்த விபத்து குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like