Tindivanam: திண்டிவனம் கோவில் வீதியில் ரூ. 1. 16கோடி செலவில் சிமெண்ட் சாலை

Tindivanam: திண்டிவனம் நகராட்சியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் முடிவடைந்து, புதிய சாலைகள் போடாமல் பணி நடந்தது. இதில் போக்குவரத்து பிரதான சாலையான ஈஸ்வரன் கோவில் வீதி சாலை மட்டும் போடாமல் நீண்ட நாட்கள் இழுபறியில் இருந்து வந்தது. இந்நிலையில் நகராட்சி சார்பில் ரூ. 1.16 கோடிக்கு சிமெண்ட் சாலை போடுவதற்காக நிதி ஒதுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று காலை தீர்த்தக்குளம் முருகன் கோவில் எதிரில் சிமெண்ட் சாலை போடும் பணி மற்றும் பூமி பூஜை நடந்தது. நகர்மன்ற சேர்மன் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமை தாங்கி, பூமி பூஜையை செய்து பணிகளை துவக்கி வைத்தார். நகராட்சி கமிஷனர் குமரன் முன்னிலை வகித்தார். நகர்மன்ற துணை சேர்மன் ராஜலட்சுமி வெற்றிவேல், கவுன்சிலர்கள் சரவணன், பரணிதரன், ரம்யா ராஜா, பாஸ்கர், ஹேமமாலினி ஜெயராஜ், முன்னாள் கவுன்சிலர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.