Thaipoosam: தேவனூர் ஊராட்சியில் விமர்சையாக நடைபெற்ற தேர் பவனி

Thaipoosam: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம், தேவனூர் ஊராட்சியில் தைப்பூச திருநாளை முன்னிட்டு ஸ்ரீ முருகன் ஆலயத்தில் இன்று (பிப்ரவரி 11) தைப்பூசத்தை ஒட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது அதனை தொடர்ந்து பக்தர்கள் அழகு குத்தியும், காவடி எடுத்தும், தேர் இழுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திமுக ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.