Chief Minister : மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

Chief Minister : வானுார் ஒன்றியத்திற்குட்பட்ட 7 ஊராட்சிகளுக்கு, கிளியனுாரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.
அருவாப்பாக்கம், தென்சிறுவளூர், ஆதனப்பட்டு, கிளியனுார், தேற்குணம், தைலாபுரம், கொந்தமூர் ஆகிய 7 ஊராட்சிகளுக்கு நடந்த முகாமை ஒன்றிய சேர்மன் உஷா முரளி துவக்கி வைத்தார். துணைச் சேர்மன் பருவகீர்த்தனா விநாயகமூர்த்தி, வானுார் பி. டி. ஓ. , க்கள் கார்த்திகேயன், தேவதாஸ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சரவணன், வானுார் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் எத்திராஜ் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், கிளியனுார் தி. மு. க. , ஒன்றிய செயலாளர் ராஜூ, ஊராட்சி தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். முகாமில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், வருவாய் துறை உட்பட 14 துறை சார்ந்த அலுவலர்கள், பொது மக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றனர்.