Villupuram : திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்: பரதன்தாங்கலில் மு. அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ பங்கேற்பு

25

Villupuram : விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த பரதன்தாங்கல் பகுதியில் திமுக சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடைபெற்றது.

இந்த முகாமில் முன்னாள் அமைச்சர் மற்றும் விழுப்புரம் திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு புதிய உறுப்பினர்களை திமுகவில் இணைத்தார்.

உறுப்பினர் சேர்க்கை நிகழ்வின்போது, மு. அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ, புதிய உறுப்பினர்களை மக்களுடன் ஸ்டாலின் செயலி வழியாகவும், நேரடியாகப் படிவங்கள் மூலமாகவும் திமுகவில் இணைத்தார்.

இந்த நிகழ்வானது திமுகவின் அடிப்படைப் பலத்தை அதிகரிக்கும் நோக்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் செஞ்சி திமுக ஒன்றிய செயலாளர் மற்றும் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இந்த உறுப்பினர் சேர்க்கை முகாம் பெரும் வரவேற்பைப் பெற்றது. திமுகவை மேலும் பலப்படுத்தும் விதமாக இம்முகாம் அமைந்தது.

You might also like