Marakkanam: மரக்காணம் அருகே குடியிருப்பு கட்டுமான பணி ஆட்சியர் ஆய்வு

Marakkanam: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் இலங்கை தமிழர் குடியிருப்பு வீடுகளை இன்று ஆய்வு செய்த ஆட்சியர் அளித்த பேட்டியில் இலங்கை தமிழர்களுக்கான குடியிருப்பு வீடுகளில் ஒவ்வொரு தனி வீட்டிற்கும் ரூ. 5,31,750 என நான்கு வீடுகள் ஒருங்கிணைந்த தொகுப்பு வீடுகளாக கட்டப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு தொகுப்பு வீடுகளுக்கும் இடையே சாலை வசதிகள் மற்றும் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.