Villupuram: விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

Villupuram: தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளிலும், தேசிய அளவிலான போட்டிகளிலும் இந்தப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் பங்கேற்றனர்.
தேசிய அளவிலான வில்வித்தையில் மாணவர் ரோகித், மாநில நீச்சல் போட்டியில் மாணவர்கள் தேவா, தவசி, ரூபன், கபிலன், ஜிம்னாஸ்டிக் போட்டியில் ரோகித், ஆகாஷ், நிர்மல்குமார், தடகளத்தில் ஏழுமலை, சந்தோஷ்கிருஷ்ணா, முதல்வர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அப்துல்லா, தீனா, ஆர். ஏழுமலை, நிஷாந்த், வி. ஏழுமலை, கராத்தே போட்டியில் கார்த்திகேயன், மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் கோகுலவாசன், கோகுல், குத்துச்சண்டை போட்டியில் கிஷோர், அக்ரம் அலி, ஸ்குவாஷ் போட்டியில் சந்தோஷ், சஞ்சய் ஆகியோர் பங்கேற்று வெற்றிபெற்றனர். அண்ணா பிறந்த நாளையொட்டி நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான மிதிவண்டிப் போட்டியில் மகாகணபதி, சந்தோஷ், கிருஷ்ணா பரிசுகளை வென்றனர்.
மாநில, தேசிய அளவில் 19 மாணவர்கள் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அவர்களுக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியர் பாலகிருஷ்ணன் மாணவர்களைப் பாராட்டி பரிசுத் தொகை, சான்றிதழ்கள், பதக்கங்களை வழங்கினார். ஆசிரியர்கள் பசுபதி, கணேசன், ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினர். உடற்கல்வி இயக்குநர் மணிவண்ணன், ஆசிரியா்கள் பிரகாஷ், ராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.