Villupuam : மாவட்ட விளையாட்டு மேம்பாட்டுக் கூட்டம்: சிறப்பான வசதிகள் மற்றும் பயிற்சிக்கு முன்னுரிமை

10

Villupuram : மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட அனைத்து விளையாட்டு சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள உள்விளையாட்டரங்கம், நீச்சல் குளம் மற்றும் கீழ்ப்பெரும்பாக்கம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மேம்படுத்தப்பட வேண்டிய சிறப்பு வசதிகள் குறித்து அலுவலர்களுடன் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மேலும், உள்விளையாட்டரங்கப் போட்டிகளான ஜூடோ, ஜிம்னாஸ்டிக், கராத்தே, வாள்வீச்சு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கு திறமையான பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சிகளை வழங்குவது தொடர்பாகவும் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அதேபோல், வெளிவிளையாட்டரங்க விளையாட்டுகளான கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, மட்டைப்பந்து மற்றும் தடகளப் போட்டிகளுக்கு தேவையான மைதானங்களில் கூடுதல் அடிப்படை வசதிகளை மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

விளையாட்டு வீரர்களுக்குச் சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் பயிற்சி வசதிகளை ஏற்படுத்தித் தருவதன் மூலம், விழுப்புரம் மாவட்டத்தின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

You might also like