Vikkiravandi :அன்னியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பு பொது கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை

Vikkiravandi : அன்னியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வரும் ஜூலை 14 ஆம் தேதி முதல் ஜூலை 18 ஆம் தேதி வரை, அனைத்துப் பாடப்பிரிவுகளுக்கும் சிறப்பு பொது கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இக்கலந்தாய்வு காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறும்.
கல்லூரியில் விண்ணப்பித்த அனைத்து பிரிவு மாணவர், மாணவியர் (கட்-ஆஃப் 400 முதல் 140 வரை) இந்த கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்.
கலந்தாய்வில் பங்கேற்கும்போது, உங்களது அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் அனைத்தையும் தவறாமல் கொண்டு வரவும்.
இந்த சிறப்பு கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை, ஒவ்வொரு துறையிலும் நிரப்பப்படாத காலி இடங்களுக்கு மட்டுமே நடத்தப்படுகிறது என்பதை மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இது மாணவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்பதால், தகுதியுடைய மாணவர்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.