விழுப்புரம் மாவாட்ட க்ரைம் & விபத்து செய்திகள்

1) திண்டிவனம் அருகே உள்ள ஜக்கான் பேட்டை சாலையில் விழுப்புரம் நோக்கி சென்ற பைக் லாரி மீது மோதியதில் இருவர் படுகாயமடைந்தனர்.
திண்டிவனம் அடுத்த பிரம்மதேசம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகரன் மற்றும் பெருமுக்கல் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி மகன் தமிழ்ச்செல்வன். இவர்கள் இருவரும் நேற்று மாலை பைக்கில் விழுப்புரம் நோக்கி ஜக்காம் பேட்டை வழியாக சென்றுள்ளனர்.
ஜக்காம்பேட்டை சாலையில் சென்ற இருசக்கர வாகனமானது நிலைதடுமாறி சாலையோரம் பழுதாகி நின்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது. நிலைதடுமாறி லாரி மீது மோதியதில் பைக்கில் சென்ற இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது.
ரோந்து பணிக்காக அவ்வழியே சென்ற நெடுஞ்சாலைத்துறை போலீசார் காயமடைந்த இருவரையும் மீட்டு அருகே உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
2) ஆரோவில் அருகே பைக் மோதியதில் காயமடைந்த கொத்தனார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இடையன் சாவடி மேட்டு தெருவைச் சேர்ந்தவர் பழனி. இவர் கொத்தனார் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 5ம் தேதி இரவு முரட்டாண்டிக்கு சைக்கிளில் சென்று விட்டு வீடு திரும்பினார்.
புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் வந்து கொண்டிருக்கும்போது புதுச்சேரியில் இருந்து டோல்கேட் நோக்கி சென்ற பைக், சைக்கிளில் சென்ற பழனி மீது மோதியது. இதில் பைக் ஓட்டி வந்த சூர்யா, பைக்கில் அமர்ந்து வந்த அவரது தந்தை வேலு மற்றும் சைக்கிளில் சென்ற பழனி என மூவரும் படுகாயம் அடைந்தனர்.
அருகே உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் மூவரும் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பழனி இரவே உயிரிழந்தார். இந்த விபத்தை ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
3) ஏரியில் தவறி விழுந்து டிரைவர் பலி.
விழுப்புரம் அடுத்த தென்னமாதேவி ஏரிக்கரையில் காலை 11 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த டிரைவர் திருமால் தவறிவிழுந்து உயிரிழந்தார்.
காலை சுமார் 10:40 மணியளவில் ஏரிக்கரை தரைப்பாலத்தின் ஓரத்தில் அமர்ந்திருந்த திருமாலை சிறிது நேரம் கழித்து காணவில்லை. எனவே அப்பகுதி மக்கள் ஏரியில் தேடியபோது தரை பாலத்தில் இருந்து தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பெருமாள் உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தவறி விழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
4) விழுப்புரம் அடுத்த காணை குப்பத்தை சேர்ந்த தம்பதிக்கு தீ காயம் அடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பட்டு வருகிறது.
விழுப்புரம் அடுத்த காணை குப்பத்தை சேர்ந்த பிரகாஷ் மனைவி அருணா கடந்த சில மாதங்களாகவே வயிற்று வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 17ஆம் தேதி மிகுந்த வயிற்றுவலியால் அருணா அவர் உடல் மீது மண்ணெண்ணையை ஊற்றி நெருப்பை வைத்துக் கொண்டார்.
இதனை கண்டு பிரகாஷ் தீயை அணைக்க முயன்றார். இதில் அருணா மற்றும் பிரகாஷ் ஆகிய இருவருக்கும் மிகுந்த தீக்காயம் அடைந்துள்ளது.
இருவரது குரல் கேட்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அருணா மற்றும் பிரகாஷ் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.