Crowd Of Passengers At Villupuram Bus Stand : விழுப்புரம் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம்.

Crowd Of Passengers At Villupuram Bus Stand : விழுப்புரம் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம்.
தீபாவளி விடுமுறை முடிந்து சொந்த ஊருக்கும், பணி நிமித்தமாக சென்னைக்கும் என புறப்பட்ட பயணிகள் கூட்டத்தால்விழுப்புரம்பஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 11ம் தேதி முதல் நேற்று 13ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டது.
இதனால், பண்டிகையைக் கொண்டாட சென்னைஉட்பட பல்வேறு நகரங்களில் பணிபுரிபவர்கள், கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் என ஏராளமானோர் சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.
இந்நிலையில் நேற்றுடன் விடுமுறை முடிந்ததால், நேற்று மதியம் முதல் மீண்டும் பணிக்கு திரும்ப பல்வேறு ஊர்களுக்குச் செல்லவிழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று பிற்பகல் மணி முதல் ஏராளமான பயணிகள் திரண்டனர்.
ஆனால், போதிய பஸ் வசதியின்றி அதியடைந்தனர். கிடைத்த பஸ்சில் ஓடிப் பிடித்து சீட் பிடித்து ஏறினர். எதிர்புறத்தில், திருச்சி மார்க்கத்தில் சென்ற பஸ்கள் காலியாக சென்ற நிலையில், சென்னை மார்க்கமாக சென்ற பஸ்கள் உடனுக்குடன் பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்ததால், மாலை 3: 00 மணி முதல் இரவு 8: 00 மணி வரை விழுப்புரம் பஸ் நிலையத்திலும், சென்னை மார்க்கத்தில் ஏராளமான பயணிகள் காத்திருந்து அவதிப்பட்டனர்.